டோனி தனது மனைவியின் பிறந்தநாளை யாருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
363Shares

இந்திய அணியின் முன்னாள் வீரரான டோனி தனது மனைவியின் பிறந்த நாளை பாகிஸ்தான் வீரருடன் சேர்ந்து துபாயில் கொண்டாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக டோனி ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறிய பின்பும், டோனி அங்கு தங்கியிருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது டோனி தன்னுடைய மனைவியான ஷாக்சியின் பிறந்தநாளை துபாயில் கொண்டாடியுள்ளார். நேற்று ஷாக்சியின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து தற்போது வரை துபாயில் இருக்கும் டோனி, தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை அங்கு, பாகிஸ்தான் வீரரான மாலிக் மற்றும் அவரின் மனைவியான சானியா மிர்சா ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்