‘எனது ஹீரோ நடராஜன் தான்’: யாக்கர் மன்னனை புகழ்ந்து தள்ளிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்

Report Print Basu in கிரிக்கெட்

2020 ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி பந்து வீச்சில் தெறிக்க விட்ட தமிழக வீரர் நடராஜனை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் புகழ்ந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டி-20 அணியில் இடம்பிடித்துள்ள நடராஜன், 2020 ஐபிஎல் தொடரில் அதிக யாக்கர் பந்துகளை வீசிய வீரர் என்ற மைல்கல்லை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடராஜனின் பந்து வீச்சு திறமையை பல வீரர்கள் பாராட்டிய நிலையில் இந்திய ஜாம்பவான் கபில் தேவும் புகழந்துள்ளார்.

ஐபிஎல் 2020 சீசனில் நடராஜன் தான் எனது ஹீரோ. இளம் வீரரான நடராஜன் அச்சமின்றி பல யார்க்கர்களை வீசினார்.

இன்று மட்டுமல்ல, கடந்து 100 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டில் யாக்கர் தான் சிறந்து பந்து என கபில் தேவ் குறிப்பிட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்