ரோகித் கூறிய அந்த வார்த்தை தான் எனக்கு உத்வேகம் கொடுத்தது! கடும் விரக்தியில் இருந்த இளம் வீரர் உருக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்
506Shares

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், ரோகித் கூறிய வார்த்தை தான் எனக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது என்று கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்காக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஐபிஎல் தொடர் மட்டுமின்றி, உள்ளூர் தொடர்களிலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆனால், அவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் கிடைக்கவில்லை, சமீபத்திய அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் கூட, அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இது குறித்து சூர்யகுமார்யாதவ் கூறுகையில், அவுஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் போனது மிகவும் வேதனையும், வலியும் கொடுத்தது.

நான் மனதளவில் மிகவும் உடைந்து போய் இருந்தேன். அப்போது நானும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் ஜிம்மில் இருந்தோம்.

அவர் என்னை பார்த்தார் உடனடியாக நான் என்னுடைய வலிகளை அவரிடம் வெளிப்படுத்தினேன். உடனே ரோகித் என்னை பார்த்து நீ மும்பை அணிக்காக நல்ல பங்களிப்பை கொடுக்கிறாய், உனது ஆட்டத்தில் மட்டும் கவனம் வைத்துக் கொள் உனக்கான வாய்ப்பு நிச்சயம் வரும் அதுவரை பொறுத்திரு என கூறினார்.

அவர் கூறிய அந்த வார்த்தைகள் எனக்குள் நம்பிக்கையை கொடுத்தது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்