இந்திய வீரரிடம் மன்னிப்பு கேட்டேன்! மேக்ஸ்வல்லை மன்னிப்பு கேட்க வைத்த மீம்ஸ்: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான போட்டியில் மேக்ஸ்வேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அது குறித்து வைரலான மீம்ஸ் குறித்து மேக்ஸ்வேல் கே.எல்.ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி வீரரான மேக்ஸ்வேல்ஸ் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து, 45(19) ஓட்டங்கள் குவித்தார்.

அதே போன்று மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான போட்டியில், ஜிம்மி நிஷிமும், 24 பந்தில் 48 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தார்.

இவர்கள் இரண்டு பேருமே சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடியவர்கள், ஆனால் இவர்கள் ஐபிஎல் தொடரில் அந்தளவிற்கு போதுமான அளவில் விளையாடவில்லை, இதுவே பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்ததுடன், பிளே ஆப் சுற்றுக்குள் நுழையமுடியாமல் போனதற்கும் காரணமாக இருந்தது.

ஆனால், இவர்கள் தேசிய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அதை குறிப்பிடும் வகையில் இணையவாசி ஒருவர், மேக்ஸ்வெல் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரின் ஆட்டத்தை பார்த்தப் பிறகு ராகுலின் நிலை இப்படி தான் இருக்கும் என்று மீம் பதிவிட்டிருந்தார்.

இதனை குறிப்பிட்டு நீஷம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இது நல்ல மீம் என்று மேக்ஸ்வேல்லை டெக் செய்திருந்தார். அதற்கு மேக்ஸ்வேல், நான் பேட் செய்யும்போது ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்