குற்றத்தை ஒப்புக்கொண்ட கோஹ்லி! ஒட்டு மொத்த இந்திய அணிக்கும் அபராதம் விதித்த ஐசிசி

Report Print Basu in கிரிக்கெட்

சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று நவம்பர் 26ம் தேதி சிட்னி மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என முன்னலைப்பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் பந்து வீசிய இந்தய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசாமல் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதாக போட்டியின் முடிவில் போட்டி நடுவர் டேவிட் பூன் அபராதம் விதித்தார்.

இதையடுத்து, இந்திய அணிக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக ஐசிசி விதித்தது.

இந்திய அணித்தலைவர் கோஹ்லி குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் முன்மொழியப்பட்ட அபராதத்தை ஏற்றுக்கொண்டார், எனவே முறையான விசாரணை தேவையில்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா-இந்தியா மோதும் 2வது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை அதே சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்