இந்த இந்திய அணியை வச்சுகிட்டு உலகக் கோப்பைக்கு வாய்ப்பே இல்லை! விளாசி தள்ளிய மைக்கல் வாகன்

Report Print Santhan in கிரிக்கெட்
445Shares

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன், தற்போது அவுஸ்திரேலியா அணிக்கெதிராக விளையாடிய இந்திய அணியை வச்சுகிட்டு ஒன்றும் செய்ய முடியாது என்று விளாசியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியா அணி 375 ஓட்டங்கள் குவிக்க அடுத்து ஆடிய இந்திய அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பலம் வாய்ந்த இந்திய அணியில் சரியான தேர்வு இல்லை, வீரர்கள் குழப்பம் உள்ளது. கோஹ்லி இந்த போட்டிக்கு சரியான வீரர்களை தெரிவு செய்து விளையாட வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கூறுகையில், இந்திய ஒருநாள் அணி கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

அவர்களிடம் ஆறாவது பவுலர் இல்லை. அதே போல, துடுப்பாட்டத்திலும் கூடுதல் வீரர்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், உலகக்கோப்பைக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. ஆனால், இந்த அணி வியூகத்தை வைத்துக் கொண்டு அவர்களால் உலகக்கோப்பை வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்