இந்திய அணிக்கெதிரான போட்டியில், பின்ச், வார்னர் மற்றும் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் அவுஸ்திரேலியா அணி 389 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முதலில் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று இரு அணிகளுக்கிடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
அதன் படி நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அவுஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர்களான வார்னர் மற்றும் பின்ச் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 142 ஓட்டங்கள் குவித்திருந்த போது, பின்ச் சமி பந்தில் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஸ்மித் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, அவுஸ்திரேலியா அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது.
What a throw from Iyer!
— cricket.com.au (@cricketcomau) November 29, 2020
Watch live #AUSvIND on @FoxCricket and @kayosports: https://t.co/CTxq6E4aSW pic.twitter.com/Vp4mzOhTws
ஸ்மித் மற்றும் வார்னர் இருவருமே இந்திய அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்க, வார்னர் ஸ்ரேயாஸ் அய்யரின் துல்லியமான த்ரோ மூலம் ரன் அவுட் ஆகினார்.
இருப்பினும் அடுத்து வந்த Marnus Labuschagne ஸ்மித்துடன் சேர்ந்து ருத்ரதாண்டவம் ஆட இறுதியாக அவுஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 389 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்மித் சதமடித்து 104 ஓட்டங்களும், வார்னர் 83 ஓட்டங்களும், Marnus Labuschagne 70 ஓட்டங்களும், ஸ்மித் 60 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா, மொகமது ஷமி மற்றும் ஹார்திக் பாண்ட்யா தல ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.