அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியர் ஒருவர் பெண்ணிடம் காதலை தெரிவித்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. அதன் படி முதலில் ஆடிய அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 389 ஓட்டங்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை 3 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டிக்கிடையே இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலனை இளம் பெண் ஒருவரிடம் தெரிவிக்கிறார். அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிவிட, அதன் பின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.
இந்த காட்சி அங்கிருக்கும் பெரிய திரையில் காட்டப்பட, இதைக் கண்ட அவுஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வேல்ஸ் கை தட்டி தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்தார்.
இந்த வீடியோவைக் கண்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
You May Like This Video