இந்திய அணிக்காக ஹார்திக் பாண்ட்யா எடுத்த முடிவு! 16 மாதங்களுக்கு பின் பந்து வீச்சு: பாராட்டி தள்ளும் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
484Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹார்திக் பாண்ட்யாவின் முடிவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிட்னியில் இன்று நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 0-2 என்று பின் தங்கியுள்ளது. அவுஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில், இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி வீரர்கள் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்க, இந்திய பந்து வீச்சாளர்கள் யாராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதன் பின் ஹார்திக் பாண்ட்யா பந்து வீச வந்து ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் வீசிய ஹார்திக் பாண்ட்யா 4 ஓவர் வீசி 24 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, விக்கெட்டும் வீழ்த்தினார்.

கடந்த ஆண்டு முதுகுப்பகுதியில் செய்துகொண்ட ஆபரேஷனுக்கு பிறகு 16 மாதங்களாக அவர் பந்து வீசவில்லை. ஐபிஎல் தொடரிலும் முழுவதுமாக ஒரு பேட்ஸ்மேனாகவே அவர் களமிறங்கினார்.

கடந்த போட்டியிலும் அவர் பந்துவீசாமல் பேட்டிங் மட்டும் செய்து 90 ஓட்டங்களை குவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் இந்திய அணியின் நிலையைக் கருதி பந்துவீச முன்வந்தது ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

You May Like This Video

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்