உலகக்கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த ஜாம்பவான் பயிற்சியாளராக நியமனம்! எந்த அணிக்கு தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜாம்பவான் அசங்கா குருசின்ஹா நைஜீரியா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி உலகக்கோப்பையை வென்ற 1996ஆம் ஆண்டு அந்த அணிக்காக விளையாடியவர் அசங்கா குருசின்ஹா.

இவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளராகவும், மேலாளராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் 54 வயதான குருசின்ஹா நைஜீரியா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியாளராக குருசின்ஹாவின் ஒப்பந்தத்தின் காலம் எவ்வளவு என்பது இன்னும் அறியப்படவில்லை.

அவர் டிசம்பர் 8 ஆம் திகதி ஊடகங்களுடன் இது தொடர்பில் பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

You May Like This Video

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்