இந்திய அணியின் தோல்விக்கு இந்த இரண்டு கேட்சுகள் தான் காரணம்! கோஹ்லி வெளிப்படையாக பேட்டி

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய அணியின் தலைவரான கோஹ்லி கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு முதலில் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், தொடரில் 2-0 என்று முன்னிலை வைத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

இந்திய அணியின் தோல்விக்கு கோஹ்லியின் ஈகோ தான் காரணம் என்றும், அவர் சில குறிப்பிட்ட வீரர்களை வேண்டும் என்றே எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், போட்டி முடிவுக்கு பின் கோஹ்லி கூறுகையில், அவுஸ்திரேலிய வீரர்கள் தன்னம்பிக்கையுடன் போட்டியை எதிர்கொண்டதுடன், வியூகம் வகுத்து விளையாடினர்.

ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச தவறிவிட்டனர்.

இந்திய துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் வலிமையாக விளையாடினர். இருப்பினும் அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்ட வீரர்கள், அவர்கள் நாட்டின் பிட்ச்கள் குறித்து சிறப்பாக அறிந்துள்ளதால் பல ஆங்கில்களில் அடித்து ஆடினர்.

குறிப்பாக, இன்றைய போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தன்னுடைய இரண்டு கேட்ச்கள் போட்டியின் தோல்வியை தீர்மானித்ததாகவும், தானும் கேஎல் ராகுலும் 40 ஓவர்கள் வரை ஸ்டாண்ட் செய்யவும் அதன்பின்பு பாண்டியா போட்டியை கையாள்வார் என்று திட்டமிட்டதாகவும் ஆனால் அந்த 2 கேட்ச்கள் தோல்விக்கு கொண்டு சென்றதாக குறிப்பிட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்