வேண்டுமென்றே நடராஜனை ஓரம் கட்டிய கோஹ்லி.. பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்திய அணியில் இடம்பிடித்தும், தமிழக வீரர் நடராஜன் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் திணறி வருகிறார்.

இந்திய அணியில் நடராஜன், சாகர் போன்ற வீரர்கள் இருந்தும் கூட ஆடும் அணியில் இடம்கிடைக்காததால் தொடர்ந்து இந்திய அணி தோல்வி அடைந்து வருகிறது.

இந்திய அணியில் நடராஜன் தற்போது டி 20 மற்றும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி 20 அணியில் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகியதால் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

முதல் போட்டியில் சைனியின் பந்துவீச்சு எடுபடவில்லை. இதனால் இரண்டாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டு நடராஜன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டாவது போட்டியிலும் நடராஜன் சேர்க்கப்படவில்லை. இரண்டாவது போட்டியிலும் சைனியின் பந்துவீச்சு எடுபடவில்லை.

இந்த நிலையில்தான் இவ்வளவு மோசமாக பவுலிங் செய்யும் சைனியை அணியில் எடுத்து நடராஜனை புறக்கணிப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

பும்ராவை ரோஹித் வளர்த்து கொண்டு வந்தது போல பெங்களூர் பவுலர் சைனியை கோஹ்லி வளர்த்து கொண்டு வர நினைக்கிறார். இதனால்தான் அவர் மோசமாக பவுலிங் செய்தாலும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கி அவரை ஊக்குவிக்கிறார்.

எதிர்காலத்தில் ஷமி இடம் காலியாகும் சமயத்தில் இந்திய அணியில் நடராஜன் நிரந்தரமாக இடம்பெற வாய்ப்புள்ளது.

இதனால் இந்திய அணிக்குள் நடராஜன் இப்போது வேண்டாம். இன்னும் கொஞ்சம் வலைப்பயிற்சி எடுக்கட்டும் என்று அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

You May Like This Video

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்