அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் மார்னஸ் லபுஸ்சேன் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை தமிழகத்தை சேர்ந்த இந்திய நடராஜன் வீழ்த்தியுள்ளார்.
இந்தியா- அவுஸ்ரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, அவுஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302- ரன்களை குவித்தது. இதையடுத்து 303-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Maiden ODI wicket for @Natarajan_91 🙌 #AUSvIND pic.twitter.com/O8wSJFy2mv
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 2, 2020
303-ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்னஸ் லபுஸ்சேன் ஆட்டம் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் நடராஜன். தற்போதைய நிலவரப்படி அவுஸ்திரேலிய அணி 22.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.