இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வந்த அதிரடி வீரர் அப்ரிடி அவசரமாக சொந்த நாடு திரும்பினார்

Report Print Raju Raju in கிரிக்கெட்
1043Shares

இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாட இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் வீரர் அப்ரிடி திடீரென சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

அவசர தேவை காரணமாகவே அப்ரிடி பாகிஸ்தான திரும்பியிருக்கிறார் என தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் புறப்படும் அப்ரிடி எத்தனை நாட்களுக்கு பின்னர் இலங்கை திரும்புவார் என்று கூறப்படவில்லை.

அப்ரிடி திரும்பி வந்தால் அவர் மீண்டும் ஒரு சுருக்கமான தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டியிருக்கும்.

இதேவேளை அப்ரிடி இல்லாத சமயத்தில் இதுவரை தான் எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள காலி கிளாடியேட்டர்ஸ் அணியை அதன் துணை தலைவர் பானுக ராஜபக்ஷ வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்