தமிழன் நடராஜன் கொடுத்த சரியான பதிலடி! வலைப்பயிற்சியில் ஆடிப் போன வீரர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
765Shares

இந்திய அணியில் விளையாடி வரும் தங்கராசு நடராஜன், பந்து வீச்சில் வெவ்வேறு விதமாக வீசமாட்டிங்கிறார், யார்க்கர் மட்டுமே என்று சிலர் கூறி வந்த நிலையில், அதற்கு வலைப்பயிற்சியில் நடராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, அங்கு மூன்று தொடர்களில் விளையாடவுள்ளது.

இதில் அவுஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரிலும், இந்திய அணி டி20 தொடரிலும் கோப்பையை வென்றுள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் துவங்க்கவுள்ள டெஸ்ட் தொடருக்காக இரு அணிகளுமே தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளன.

இந்த தொடரில் இந்திய அணிக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்தாக, வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் பார்க்கப்படுகிறார். யார்க்கர் கிங் என்றழைக்கப்படும் இவரிடம், பந்துகளை வெவ்வேறு விதமாக வீசும் திறன் இல்லை, ஒரே யார்க்கரை வைத்து கிரிக்கெட்டில் காலம் தள்ள முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வலைப்பயிற்சியின் போது, வீரர்களுக்கு பந்து வீசிய நடராஜன், மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

இவரின் பவுலிங் பார்த்து இந்திய அணியின் தேர்வுக்குழு பெரிய அளவில் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்திய பவுலிங் பயிற்சி குழு சொன்னபடி அப்படியே இவர் பவுலிங் செய்கிறார்.

இவர் யார்க்கர் மட்டுமின்றி துல்லியமான பவுன்சர், ஸ்லோ பால், ஆப் சைட் பந்துகளை வரிசையாக போட்டு அசத்தி இருக்கிறார். ஷார்ட் பந்துகளை தேவையான நேரத்தில் வீசி ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

பந்துகளை வெவ்வேறு விதமாக வீசும் திறன் நடராஜனிடம் இல்லை என்று வைக்கப்பட்ட புகார்களுக்கு வலைப்பயிற்சியில் இவர் சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்