இந்திய அணி வீரர் சஹாலுக்கு திருமணம் முடிந்தது! பெண் யார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்
491Shares

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹால், இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக தனக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கூறி, புகைப்படம் பதிவிட்டுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்திய அணியில் இருக்கும் ஜாலியான வீரர்களில் ஒருவர் யுவேந்திர சஹால். டோனி முதல் தற்போது வரை வந்திருக்கும் இளம் வீரர்களிடம் இவர் தன்னுடைய ஜாலியான போக்கை வெளிப்படுத்தி வருகிறார்.

இப்படிப்பட்ட இவருக்கும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடன இயக்குனரும், யூடியூபருமான தனஸ்ரீ வர்மாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.

இவர்களின் திருமணம் எப்போது என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். ஆனால் அதைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில், திடீரென்று சஹால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தங்கள் இருவருக்கும் இன்று(22.12.2020) திருமணம் முடிந்துவிட்டதாக கூறி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்