இந்திய அணிக்கு இனி வாய்ப்பே இல்லை! மிகவும் மட்டம் தட்டி பேசிய அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன்

Report Print Santhan in கிரிக்கெட்
314Shares

இந்திய அணி, அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன், மார்க் வாக் கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை அவுஸ்திரேலியா, டி20 தொடரை இந்தியா என கைப்பற்ற, இரு அணிகளுக்கிடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. கையில் இருந்த போட்டியை அப்படியே அவுஸ்திரேலியாவிடம் இந்தியா கொடுத்துவிட்டது.

இதையடுத்து கோஹ்லிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் இரண்டாவது, மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. நாடு திரும்புகிறார்.

இதனால் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ரஹானே இருப்பார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான மார்க் வாக் இந்திய அணியை மட்டம் தட்டும் வகையில் பேசியுள்ளார்.

அவர், அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். ஏனெனில் அந்த ஒரு ஆட்டத்தில் கோஹ்லி நன்றாக ஆடினார். அவர் கேப்டனாக இருந்தார். அந்த ஆடுகளத்தின் சூழல் இந்திய அணிக்கு உகந்ததாக இருந்தது.

ஆனால் அந்த ஆட்டத்தின் மூன்றாவது நாளிலேயே இந்திய அணியை அவுஸ்திரேலியா தவிடு பொடியாக்கிவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் தற்போது கோஹ்லி இல்லை.

இதன் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் சிறிதுமில்லை. இந்த தொடரில் அவுஸ்திரேலியா அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முழுமையாக கைப்பற்றும் என்று கூறியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்