நினைத்து பார்க்க முடியாத வகையில் போல்ட் ஆன ஸ்மித்! வெறுத்து போய் பவுலியன் திரும்பிய வீடியோ காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்
501Shares

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நினைத்து பார்க்க முடியாத வகையில் அவுட்டான ஸ்மித், வெறுத்து போய் பெளலியன் திரும்பிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி, மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய அவுஸ்திரேலியா 195 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அடுத்து ஆடிய இந்திய அணி 326 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

இதனால் 131 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில், ஆடிய அவுஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால், நான்கு விக்கெட்டுகளை இந்திய அணி விரைவில் வீழ்த்திவிட்டால் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

இந்நிலையில், இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்மித், இந்த இரண்டாவது இன்னிங்ஸிலும் 30 பந்துகளை சந்தித்து 8 ஓட்டங்களில் வெளியேறினார்.

முதலில் அஸ்வின் பந்தில் அவுட்டாவதால், அவர் பந்தை நிதானமாக ஆடி வந்த ஸ்மித், இந்த முறை பும்ரா பந்துவீச்சில் இப்படியும் அவுட் ஆக முடியுமா என்பது போல் அவுட் ஆகினார்.

லெக் திசையில் வந்த பந்தை ஸ்மித் அடித்து ஆட முற்பட, ஆனல் பந்தானது லேசாக போல்ட்டில் பட்டு சென்றதால், பைஸ் கீழே விழுந்தது. ஆனால் ஸ்மித் இதை கவனிக்காமல் ஓட்டம் ஓட முயற்சி செய்தார். அதன் அவுட் என்றவுடன் தலையை ஆட்டியவாறு வெறுத்து போய் பவுலியன் திரும்பினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்