டோனியின் செயலுக்கு 9 ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மிகப் பெரும் விருது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Santhan in கிரிக்கெட்
344Shares

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது, டோனி நடந்து கொண்ட விதத்தால், அவரை கவுரவிக்கும் விதமாக ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இருப்பினும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். டோனி ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்பான சாதனைகள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தற்போது டோனிக்கு ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது கொடுக்கப்பட்டுள்ளது. டோனி அன்று 2011-ஆம் ஆண்டு செய்த செயலுக்கு இப்போது இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. இதில் இயன் பெல் 137 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

அப்போது அவர் நடுவர்களின் தவறான தீர்ப்பால் ரன் அவுட் ஆகினர். இதன்பின் அந்த விக்கெட்டை ஆராய்ந்து பார்க்கையில் அது நாட் அவுட் என்று தெரியவந்தது.

உடனடியாக இந்திய அணியின் அப்போதைய கேப்டன் டோனி, இயன் பெல்லை களத்திற்கு அழைத்து மீண்டும் விளையாட வைத்தார். அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைத்தது. அப்போது டோனியின் நேர்மையை கண்டு அனைவரும் பாராட்டினர்.

டோனி அன்று எடுத்த அந்த முடிவுக்கு தான், தற்போது பெரும் விருது கிடைத்துள்ளது. ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் என்ற சிறந்த உத்வேக வீரருக்கான விருது டோனிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதிற்கு ரசிகர்கள் போட்டியின்றி டோனியை தெரிவு செய்துள்ளனர்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்