பதிற்றாண்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்: வெளியான அறிவிப்பு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
174Shares

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) பதிற்றாண்டில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி வென்றுள்ளார்.

ஐசிசியின் பதிற்றாண்டுக்கான விருது வழங்கும் விழா காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை விராட் கோஹ்லி வென்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கான ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் வென்றார்.

பதிற்றாண்டில் அறம் சார்ந்து விளையாடியதற்கான விருதை இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் டோனி வென்றுள்ளார்.

இங்கிலாந்து வீரர் இயான் பெல்லின் சர்ச்சைக்குரிய வகையிலான ரன் அவுட்டை திரும்பப் பெற்றதற்காக இந்த விருதுக்கு டோனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

  • சிறந்த கிரிக்கெட் வீரர்: விராட் கோஹ்லி
  • சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: எலைஸ் பெரி
  • சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: ஸ்டீவ் ஸ்மித்
  • சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்: விராட் கோஹ்லி
  • சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை: எலைஸ் பெரி
  • சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்: ரஷித் கான்
  • சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை: எலைஸ் பெரி

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்