அவுஸ்திரேலியாவை கோஹ்லி இல்லாமலே பழி தீர்த்த இந்தியா! 2-வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்
292Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை1-1 என்று சமன் செய்துள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் நோக்குடன் களமிறங்கியது.

அதுமட்டுமின்றி சொந்த காரணங்கள் காரணமாக கோஹ்லி நாடு திரும்பியதால், கோஹ்லி இல்லாமல் இந்தியா வாய்ப்பே இல்லை என்று முன்னணி வீரர்கள் பலரும் கூறி வந்தனர்.

ஆனால், ரஹானே தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸிலே கதறவிட்டது. முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி பும்ரா மற்றும் அஸ்வின் சூழலில் 196 ஓட்டங்களுள் ஆல் அவுட் ஆக, அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் ஜடேஜா மற்றும் ராஹானே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 326 ஓட்டங்கள் குவித்தது.

ராஹேனே 112 ஓட்டங்களும், ஜடேஜா 57 ஓட்டங்களும் குவித்தார்.

இதையடுத்து 131 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறியது. பும்ரா, அஸ்வின், சிராஜ் ஆகியோர் அவுஸ்திரேலியா அணி வீரர்களை மிரட்ட, அவுஸ்திரேலியா அணி 200 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

இதனால் 70 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு இறுதியாக இலக்கை எட்டிப்பிடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தல 1 வெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 7-ஆம் திகதி நடைபெறவுள்ளது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்