இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் சாதனையை முறியடித்த அஸ்வின்!

Report Print Santhan in கிரிக்கெட்
400Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தியதன் மூலம், இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சாதனையை இந்திய வீரர் அஸ்வின் முறியடித்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதில் அவுஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் விக்கெட்டை அஸ்வின் வீழத்தியபோது, டெஸ்ட் போட்டியில் அதிகமான இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன் இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்தான் டெஸ்ட் போட்டிகளில் 191 இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை அஸ்வின் தற்போது முறியடித்து, 192 இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இது வரை 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 375 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிகமான இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில், இங்கிலாந்தின் ஆன்டர்ஸன்(186), கிளென் மெக்ராத்(172), ஷேன் வார்ன்(172), அனில் கும்ப்ளே(167) வீழ்த்தியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்