இந்திய அணி எங்களை தவறு செய்ய வைத்துவிட்டது! தோல்விக்கு பின் புலம்பி தள்ளிய அவுஸ்திரேலியா கேப்டன்

Report Print Santhan in கிரிக்கெட்
471Shares

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தோல்விக்கு முக்கிய காரணம் நாங்கள் செய்த சில தவறுகள் தான் என்று அவுஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன.

இது குறித்து அவுஸ்திரேலியா அணியின் கேப்டன், டிம் பெய்ன், இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. மோசமான, ஒழுங்கற்ற ஆட்டத்தை ஆடினோம். இந்தியாவுக்கான பாராட்டை கொடுத்தாக வேண்டும். எங்களை தவறு செய்ய வைத்தார்கள்.

மிக அழகாக பந்துவீசினார்கள். நாங்கள் நினைத்த அளவுக்குக் ஆடவில்லை. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன.

கடுமையாக உழைத்து மீண்டு வருவோம். கேமரூன் க்ரீன் நன்றாக ஆட ஆரம்பித்திருக்கிறார். தொடர்ந்து பல போட்டிகளில் ஆடும்போது அவர் சிறப்பான வீரராக விளங்குவார் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்