டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்திய அணி: கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
220Shares

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

நியூசிலாந்து அணி இந்த வருடத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றி பெற்றது. ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. அப்போது அவுஸ்திரேலியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் தசம புள்ளி அளவிலேயே இடைவெளி இருந்தது.

மெல்போர்ன் டெஸ்டில் இம்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா தோல்வியடைந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

இதனால் நியூசிலாந்து 117 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து முதன்முறையாக கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்