அவுஸ்திரேலிவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன்! வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in கிரிக்கெட்
956Shares

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 3வது நாளின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயமடைந்தார்.

காயமடைந்த உமேஷ் யாதவ் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் என்றும், மேலும் புதன்கிழமை இரவு அவுஸ்திரேலியாவிலிருந்து இந்திய புறப்பட்டார் என இந்திய அணிக்கு நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள்காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு திரும்பிய உடன் உமேஷ் யாதவ் பெங்களுருவில் உள்ள தேசிய கிரக்கெட் அகடாமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், உமேஷ் யாதவுக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்படுவார் என இந்திய அணிக்கு நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள்காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்