ஐசிசி தரவரிசை: கோஹ்லி.. ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த நியூசிலாந்து நட்சத்திரம்

Report Print Basu in கிரிக்கெட்
120Shares

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில், 3வது இடத்திலிருந்த நியூசிலாந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் 129 ரன்களையும் 21 ரன்களையும் எடுத்ததால் அவர் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 890 புள்ளிகளுடன் முதலிடத்தில் பிடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து 2வது இடத்தில் கோஹ்லி(879), அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித் (877) 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்திய வீரர் ரஹானே 784 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்து வீச்சு தரவரிசையில், 906 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய வீரர் பாட் கமின்ஸ் முதலிடம் வகிக்கிறார்.

இங்கிலாந்து வீரர் Stuart Broad 845 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், நியூசிலாந்து வீரர் Neil Wagner 833 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.

அவுஸ்திரேலியா வீரர் ஸ்டார்க் 804 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 793 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கும், பும்ரா 783 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் பட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 446 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

மேற்கிந்திய தீவுகள் வீரர் ஹோல்டர் 423 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இந்திய வீரர் ஜடேஜா 416 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் அஸ்வின் 285 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்