முறிந்த கால் விரல்கள்: 21 ஓவர்கள் பந்து வீசிய வீரருக்கு குவியும் பாராட்டு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
206Shares

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு விரல்கள் முறிந்த நிலையிலும், நியூசிலாந்து அணிக்காக விளையாடி வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார் நீல் வாக்னர்.

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் துடுப்பாட்டத்தில் ஈடுபடும்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வீசிய யார்க்கர் பந்து நீல் வாக்னரில் வலது கால் பாதத்தை பலமாக தாக்கியது. இதில் அவரது இரண்டு விரல்கள் முறிந்தன.

இருப்பினும், வலி நிவாரண மருந்து ஊசியை போட்டுக்கொண்டு முதல் இன்னிங்சில் 21 ஓவர்கள் வீசி 2 விக்கெட் வீழ்த்தினார்.

2-வது இன்னிங்சிலும் 28 ஓவர்கள் வீசிய நீல் வாக்னர் 2 விக்கெட் கைப்பற்றினார். விரல்கள் முறிந்த நிலையிலும், வலி நிவாரண ஊசியை போட்டுக்கொண்டு அணியின் வெற்றிக்காக அஞ்சாமல் பந்து வீசிய நீல் வாக்னரை பாகிஸ்தான் அணி வீரர்கள் பாராட்டியுள்ளனர்.

இதனிடையே, நீல் வாக்னர் காயம் காரணமாக 2-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்