அவுஸ்திரேலியா-இந்தியா மோதும் கடைசி டெஸ்ட் நடக்குமா? பிசிசிஐ அதிகாரி கூறிய முக்கிய தகவல்

Report Print Basu in கிரிக்கெட்
253Shares

பிரிஸ்பேனில் அவுஸ்திரேலியா-இந்தியா மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பிசிசிஐ வட்டாரத்திலிருந்து முக்கிய தகவல் வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி 7-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி பிரிஸ்பேனில் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அந்த மாகாண சுகாதாரத்துறையின் நிழல் அமைச்சர் ரோஸ் பேட்ஸ், குயின்ஸ்லாந்து அரசாங்கத்தின் விதிமுறைக்குட்பட்டு இந்திய வீரர்கள் விளையாட விரும்பவில்லை என்றால் அவர்கள் பிரிஸ்பேன் வர வேண்டாம் என காட்டமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் சம்மந்தப்பட்ட எதிர்பாராத நிகழ்வுகளால் பிசிசிஐ அதிருப்தியடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3வது போட்டியுடன், அதாவது சிட்னியோடு டெஸ்ட் தொடரை முடித்துக்கொள்வது தொடர்பில் பிசிசிஐ மறுபரிசீலனை செய்து வருகிறது என பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்