பயந்து நடுங்கும் இந்தியா! இங்கு அவுஸ்திரேலியாவை ஜெயிச்சதே கிடையாது: மார் தட்டும் முன்னாள் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
259Shares

இந்திய அணி, பிரிஸ்போனில் நடக்கும் போட்டியை நினைத்து பயப்படுவதாகவும், இங்கு அவுஸ்திரேலியாவை யாரும் ஜெயித்தது கிடையாது என்று முன்னாள் வீரர் பிராட் ஹடின் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போனில் இருக்கும் கப்பா என்று அழைக்கப்படும் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அதிக அளவு கடைபிடிக்க படுவதால் அதனை காரணம் காட்டி இந்தியா அங்கு செல்ல விரும்பவில்லை எனவும், விளையாட விருப்பமில்லாமல் இருப்பதாகவும் செய்தி வெளியானது.

அதுமட்டுமின்றி, இந்த மைதானத்தில் சுமார் 30 வருடத்திற்கும் மேலாக எந்த அணியும் அங்கு அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது கிடையாது. இந்திய அணியும் அந்த மைதானத்தில் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

இதன் காரணமாகவே இந்தியா இங்கு செல்ல மறுப்பதாக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாடின் கிண்டலாக பேசியுள்ளார்.

அவர், கிரிக்கெட் பார்வையில் பார்க்கும் போது இந்திய அணி ஏன் கப்பா செல்ல விரும்பும்? அந்த மைதானத்தில் யாரும் அவுஸ்திரேலியாவை வென்றது கிடையாது. அவுஸ்திரேலியா அணியும் அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

அந்த குறிப்பிட்ட மைதானத்தில் அவுஸ்திரேலியா அணியை எந்த ஒரு அணியையும் வீழ்த்தியதே இல்லை. இந்த விஷயத்தை இந்திய வீரர்கள் நினைக்க வாய்ப்புள்ளது.

மேலும் நீண்ட நாட்களாக பாதுகாப்பு வளையத்தில் இருந்து இந்தியர்கள் சற்று சோர்வடைந்து இருக்கலாம். இதனால் போட்டியை எங்கும் மாற்ற முடியாது. அவுஸ்திரேலியா வரும்போதே இங்கு என்ன நடைமுறை இருக்கிறது என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருக்கும்.

இங்குள்ள கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் இதுதான் நடக்கும் என்று தெரிந்து இந்தியர்கள் அடம் பிடிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்