அடுத்த சவால்களுக்கு தயார்! தமிழக வீரர் நடராஜன் பெருமையுடன் வெளியிட்ட புகைப்படம்

Report Print Basu in கிரிக்கெட்
948Shares

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜன் ட்விட்டரில் தனது பெருமைமிக்க புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, இந்திய அணியில் இடம்பிடித்த வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகியதால் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும், டி-20 தொடரிலும் தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக பந்து வீசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

டெஸ்ட் அணியில் நடராஜன் இடம்பெறவில்லை என்றாலும் அவரை நெட் பவுலராக இந்திய அணி பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் உமேஷ் யாதவ் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பினார்.

இதனையடுத்து, உமேஷ் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தார்.

இந்நிலையில், தான் இந்திய அணியின் வெள்ளை ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த நடராஜன், வெள்ளை ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம். அடுத்த சவால்களுக்கு தயாராக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்