பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in கிரிக்கெட்
157Shares

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கங்குலிக்கு கடந்த வாரம் 'லேசான' மாரடைப்பு ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்.

angioplasty சிகிச்சை அளிக்கப்பட்ட கங்குலி புதன்கிழமை (டிசம்பர் 06) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்குலியின் உடல்நிலை குறித்து பேசிய இருதயநோய் நிபுணர் டாக்டர் தேவி ஷெட்டி, கங்குலியின் இதயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.

தற்போது கங்குலியின் இதயம் அவருக்கு 20 வயதில் இருந்ததைப் போலவே வலுவாக இருக்கிறது என்று கூறினார்.

ஆனால் இந்த பிரச்சினை அவரது coronary artery-ல் அடைப்பு ஏற்பட்டது தான்.

கங்குலிக்கு பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. coronary artery-ல் அடைப்பு ஏற்படுவது என்பது பெரும்பாலான இந்தியர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் அனுபவிக்கும் பிரச்சினை தான்.

கங்குலி இதயம் பாதிக்கப்படவில்லை. அவருக்கு அடைப்பு ஏற்பட்டது, கொஞ்சம் அசௌகரியம் ஏற்பட்டது, ஆனால் சரியான நேரத்தில் சரியான மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதால், அவருக்கு சரியான சிகிச்சை கிடைத்தது.

இதயத்தை சேதப்படுத்துக்கூடிய அளவிற்கு அவருக்கு ஒரு பெரிய மாரடைப்பு ஏற்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் மிகவும் வலுவான இதயம் கொண்டவர் என்று டாக்டர் ஷெட்டி கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்