பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர், இந்திய அணியின் முன்னாள் வீரரான டோனியைப் பற்றி ஒற்றை வார்த்தையில் கூறி பதில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் செய்த சாதனைகள் இப்போது வரை பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிக் அக்தர், ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.
Its the name of an era
— Shoaib Akhtar (@shoaib100mph) January 3, 2021
அந்த வகையில், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் டோனியைப் பற்றி ஒற்றை வார்த்தையில் என்ன சொல்லலாம் என்று கேட்க, அதற்கு அக்தர் சகாப்தத்தின் பெயர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது டோனி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.