அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் எடுக்காமல் போனதற்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது.
உமேஷ் யாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியதால், தமிழக வீரரான நடராஜன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே போன்று பிசிசிஐ-யும் டெஸ்ட் அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. அதுமட்டுமின்றி நடராஜனும் வெள்ளை நிற ஜெர்சியை அணிந்து இது பெருமையாக இருப்பதாக குறிப்பிட்டார்.
A proud moment to wear the white jersey 🇮🇳 Ready for the next set of challenges 👍🏽#TeamIndia @BCCI pic.twitter.com/TInWJ9rYpU
— Natarajan (@Natarajan_91) January 5, 2021
இதனால் நிச்சயமாக நடராஜன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடராஜனுக்கு பதிலாக நவ்தீப் சைனி இடம் பெற்றார்.
இது தமிழக ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் இதற்கு முக்கிய காரணம் அவுஸ்திரேலியா அணி 2-வது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக சிட்னியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.
அதுமட்டுமின்றி சிட்னி மைதானத்தில் பவுன்சர் அதிகம் வீசலாம், நடராஜனை விட நவ்தீப் சைனி நன்றாக பவுன்சர் வீசுவார் என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.