ரூ .7.8 கோடிக்கு வாங்கப்பட்ட இந்திய வீரரை விடுவிக்கும் சிஎஸ்கே! யார் அவர்? கசிந்த தகவல்

Report Print Basu in கிரிக்கெட்
582Shares

ஐபிஎல் 2021 ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி ரூ .7.8 கோடிக்கு வாங்கப்பட்ட இந்திய வீரரை விடுவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2021-க்கான பணிகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. ஐபிஎல் அணி உரிமையாளர்கள், தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20-க்கு முன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் ஏலத்தின் திகதியை பிசிசிஐ பின்னர் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை அணி 2020 ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிய இந்திய வீரர் கேதார் ஜாதவை விடுவிக்கவுள்ளதாக அணி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

2020 ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி கேதார் ஜாதவ் வெறும் 62 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார், அதுமட்டுமின்றி அவர் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்து குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி கேதார் ஜாதவை ரூ .7.8 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்