அவுஸ்திரேலியா கேப்டனின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட பும்ரா! அப்படியே திரும்பி பார்க்காமல் சென்ற வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
548Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டிம் பெய்னின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட பும்ராவின் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 338 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

சட்டீஸ்வர் புஜாரா 9 ஓட்டங்களுடனும், அஜின்கியே ரஹானே 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புஜாரா, அவுஸ்திரேலியா அணி வீரரான டிம் பெய் துடுப்பெடுத்தாடிய போது, தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்டார்.

போல்ட்டானவுடன் டிம் பெய்ன் போல்ட் ஆனதை பார்க்காமல் அப்படியே திரும்பி சென்ற வீடியோ இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்