ஐபிஎல் தொடர்களில் இதுவரை மொத்தமாக அதிகம் சம்பளம் பெற்ற வீரர் யார் தெரியுமா? வெளியான பட்டியல்

Report Print Santhan in கிரிக்கெட்
1021Shares

ஐபிஎல் தொடர் மூலம் டோனி இதுவரை 137 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும், அதற்கு அடுத்த படியாக ரோகித், கோஹ்லி உள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் ஏலத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவர்.

இதுவரை 13 ஐபிஎல் தொடர்கள் நடைபெற்று முடிந்துள்ளது. 14-வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களி நடைபெறவுள்ளது.

இதற்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 11-ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணிகள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு வரும் 21-ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பரஸ்பர அடிப்படையிலான வீரர்கள் பரிமாற்றம் பிப்ரவரி 4-ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கியதில் இருந்து வரும் சீசன் வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

டோனி இதுவரை நடந்துள்ள 13 சீசன்களிலும் அடுத்த சீசனிலும் அவர் 15 கோடி ரூபாய் சம்பளத்துடன் கேப்டனாக நீடிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதுவரை ஐபிஎல் மூலம் 137.8 கோடி ரூபாயை டோனி சம்பளமாக பெற்றுள்ளார். அடுத்த சீசனில் 15 கோடி ரூபாயும் சேரும்போது அவர் ஐபிஎல் மூலம் 150 கோடி சம்பளம் பெறும் முதல் வீரர் என்ற நிலையை அடைவார்.

இவருக்கு அடுத்த படியாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா 131.6 கோடியுடன் 2வதுஇடத்திலும், பெங்களூரு கேப்டன் கோஹ்லி 126.2 கோடியுடன் 3வது இடத்திலும் உள்ளனர்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்