சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா-இந்தியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் டி-20 தொரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
இதனை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட ஜனவரி 7-ஆம் திகதி சிட்னி மைதானத்தில் தொடங்கியது.
முதல் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னங்ஸில் 338 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலியா அணி, 4வது நாள் வரை தொடர்ந்து விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்து.
இந்திய அணி வெற்றிக்கு 407 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. 4வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
ரோகித் சர்மா (52), ஷுப்மன் கில் (31) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். புஜாரா (9), ரஹானே (4) ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இன்னும் 309 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 5வது களமிறங்கிய இந்திய அணி, 5வது நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்ள் எடுத்தது போட்டியை டிரா செய்தது.
ரோகித் சர்மா (52), ஷுப்மன் கில் (31), புஜாரா (77), ரஹானே (4), ரிஷப் பண்ட் (97) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
விஹாரி-அஸ்வின் ஜோடி கடைசி வரை அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கதறவிட்டது.
What is going on out there? #AUSvIND pic.twitter.com/R8b881lq9T
— cricket.com.au (@cricketcomau) January 11, 2021
விஹாரி 161 பந்துகளில் 4 பவுண்டரி அடித்து 23 ஓட்டஙகள் அடித்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 128 பந்துகளில் 7 பவுண்டரி அடித்து 39 ஓட்டங்கள் எடுத்தார்.
It didn't stick! India still five down.
— cricket.com.au (@cricketcomau) January 11, 2021
Live #AUSvIND: https://t.co/KwwZDvTCIg pic.twitter.com/ByJHTuSO7H
3வது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என்ற வெற்றி கண்ககில் சமநிலையில் இருக்கிறது.
Vihari edges and a chance goes down late on the final day...
— cricket.com.au (@cricketcomau) January 11, 2021
Live coverage: https://t.co/xdDaedY10F #AUSvIND pic.twitter.com/UdVjUmKYrS
இரு அணிக்களுக்கும் இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 15ம் திகதி தொடங்குகிறது.