இப்படியெல்லாம் செஞ்சு ஜெயிக்கனுமா? ஸ்மித் செய்த கேவலமான செயல்: ஸ்டெம்ப் கமெராவில் பதிவான காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்
563Shares

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் செய்த செயலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7-ஆம் திகதி நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 338 ஓட்டங்களும், அதன் பின ஆடிய இந்திய அணி 244 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 94 ஓட்டங்கள் முன்னிலையுடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது.

அதன் பின் 407 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கடைசி கட்டத்தில், அஸ்வின் மற்றும் விகாரி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டிரா செய்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பாண்ட் சிறப்பாக விளையாடி அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்.

ரிஷ்ப் பாண்ட் கடந்த போட்டிகளை விட இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். இதனால் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 97 ஓட்டங்களில் அவுட் ஆகி பவுலியன் திரும்பினார்.

இந்நிலையில், ஆட்டத்தின் தேநீர் இடைவெளிக்காக வீரர்கள் சென்றிருந்தனர். அப்போது வீரர்கள் மீண்டும் மைதானத்திற்குள் வந்த போது, அவுஸ்திரேலியா வீரர் ஸ்மித் ரிஷப் பண்ட் போட்டு வைத்திருந்த கார்டை நீக்கினார்.

சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பாண்ட்டை குழப்புவதற்காக இந்த கேவலமான செயலை ஸ்மித் செய்துள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் தனது கார்டை மீண்டும் போட்டு கொண்டார். ஸ்மித் செய்த இந்த செயல் ஸ்டெம்புகளில் இருந்த கேமராக்கள் மூலம் பதிவாகியது.

இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் இப்படி எல்லாம் செஞ்சு ஜெயிச்சே ஆகனுமா என்று ஸ்மித்தை சாடி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்