அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு? வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in கிரிக்கெட்
366Shares

அவுஸ்திரேலியாவுககு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய நட்சத்தர வீரர் பும்ராவும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

சிட்னியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின்போது பும்ராவுக்கு அடிவயிற்றில் தசைபிடிப்பு ஏற்பட்டது.

பும்ராவின் ஸ்கேன் ரிப்போர்ட் தசை பிடிப்பு ஏற்பட்டிருப்பதை காட்டியுள்ளன என்றும், இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மனதில் கொண்டு, அவர் காயத்தின் தீவிரத்தை அதிகரிக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

சிட்னியில் பீல்டிங் செய்யும் போது ஜஸ்பிரித் பும்ராவுக்கு வயிற்றில் தசைபிடிப்பு ஏற்பட்டது.

ஜனவரி 15ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளார் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பும்ராவுக்கு பதிலாக நாடராஜன் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. எனினும், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்