முட்டாள் தனமாக நடந்து கொண்டேன்! தமிழன் அஸ்வினிடம் மன்னிப்பு கேட்ட அவுஸ்திரேலியா கேப்டன்

Report Print Santhan in கிரிக்கெட்
210Shares

அவுஸ்திரேலியா அணியின் தலைவரான டிம் பெய்ன் அஸ்வினிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் டிராவில் முடிந்தது.

போட்டியின் ஐந்தாம் நாளில் 407 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 272 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதனால் அடுத்த 5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று அவுஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் நினைத்திருந்தார்.

ஆனால், அஸ்வின் மற்றும் விஹாரி ஜோடி தற்காப்பு ஆட்டம் விளையாடி, இந்திய அணியை தோல்வில் இருந்து காப்பாற்றினர்.

இப்போட்டியில், அஸ்வினை வெறுப்பேற்றி அவுட்டாக்கிவிட வேண்டும் என்பதற்காக, அஸ்வினிடம், அவுஸ்திரேலியா கேப்டன் டிம் பெய் வெறுப்பேற்றும் வகையில் பேசினார்.

அதில், நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போனில் நடக்கவுள்ளது, அங்கு நீ எப்படி விளையாடுகிறாய் என்பதை நான் பார்க்கிறேன் என்று கூறினார்.

இதற்கு அஸ்வின் நீ இந்தியா வந்து விளையாடி பார், அது உனக்கு கடைசி தொடராக இருக்கும் என்று அஸ்வின் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், இது குறித்து டிம் பெய்ன் கூறுகையில், அஸ்வினிடம் அநாகரீகமாக நடந்து கொண்டற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், நானும் மனிதன் தானே செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

போட்டி முடிந்தவுடன் அஸ்வினிடம் பேசினேன், அவரிடம் இது குறித்து வருத்தம் தெரிவித்தேன், கடைசி இரண்டு நாள் ஆட்டத்தில், என்னுடைய கேப்டன்சிப் மிகவும் மோசமாக இருந்தது, ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எண்ணற்ற தவறுகள் செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்