இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்டகாரர் லகிரு திரிமண்ணே இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமான உலக சாதனை படைத்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டகாரராக களமிறங்கிய திரிமண்ணே 4 ஓட்டங்களில் அவுட்டானார்.
இதன் மூலம் 143 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த சராசரி கொண்ட துடுப்பாட்டகாரராக மாறி உலக சாதனை படைத்துள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி, இதுவரை அவர் விளையாடிய 37 டெஸ்ட் போட்டிகளில் 70 இன்னிங்ஸ்களில் திரிமண்ணேவின் சராசரி 22.06 ஆகும்.
1877 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1 முதல் 6 விக்கெட்டுக்குள் விளையாடி டாப் ஆர்டர் துடுப்பாட்டகாரர்களில், 50 க்கும் மேற்பட்ட இன்னிங்ஸ்களை விளையாடிய வீரர்களிடையே மிகக் குறைந்த சராசரி கொண்ட துடுப்பாட்டகாரராக மாறினார் திரிமண்ணே.
திரிமண்ணே, 2007 ஆம் ஆண்டில் வங்கதேச வீரர் ஜாவேத் ஒமர் படைத்த முந்தைய சாதனையை முறியடித்து இந்த சாதனையை படைத்துள்ளார் .