ரன் அவுட் ஆக்க நினைத்து ரோகித் மீது த்ரோ செய்த இந்திய வீரர்! நூலிழையில் காயத்தில் இருந்து தப்பிய காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்
255Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மா நூலிழையில் காயத்தில் இருந்து தப்பிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போனில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

இதில் அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 369 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில், இப்போட்டியின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ஸ்மித் மற்றும் லேபுஷேன் ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்த போது, ஸ்மித் லெக் திசையில் அடித்து விட்டு ஒரு ரன் ஓட முயற்சித்தார்.

உடனே அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த பிரித்வி ஷா பந்தை பிடித்து, மின்னல் வேகத்தில் ஸ்டம்பை நோக்கி எறிய, பந்தானது, கவர் திசையில் இருந்த ரோகித் சர்மாவை நோக்கி சென்றது.

இதனால் பந்து தன்னை நோக்கி வருவதை அறிந்த ரோகித் உடனே தன்னுடைய கையால் தடுத்துவிட்டா, ரோகித் மட்டும் சரியாக கவனிக்காமல் இருந்தால், ரோஹித்திற்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருக்கும்.

ஏற்கனவே இந்திய அணியில் வீரர்கள் காயத்தில் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில் ரோகித்திற்கு மட்டும் காயம் ஏற்பட்டிருந்தால், இந்திய அணியின் நிலைமை மேலும் கஷ்டம் ஆகியிருக்கும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்