இப்படி யாரும் மோசமாக அவுட் ஆகமாட்டாங்க! வைரலாகும் வீடியோ: ரோகித்தை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்

Report Print Santhan in கிரிக்கெட்
887Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பொறுப்பற்ற முறையில் அவுட்டான இந்திய அணி வீரர் ரோகித்சர்மாவை முன்னாள் வீரர் கவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போனில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸ் ஆடிய அவுஸ்திரேலியா அணி 369 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதன் பின் ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தடைபட்டது.

இப்போட்டியில் அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா பொறுப்பற்ற முறையில் அவுட்டானார். சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பந்து வீச்சில் அவுட்டாகினார்.

இதைக் கண்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இது பொறுப்பற்ற ஆட்டம். அதற்கு முன்பு தான் பவுண்டரி விளாசியுள்ளீர்கள், அதற்குள் ஏன் இந்த அவசரம், ஒரு மூத்த வீரர் விளையாடும் ஆட்டமா இது, இதை மன்னிக்கவே முடியாது என்று விமர்சித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்