முதல் போட்டியிலேயே அபாரம்: நடராஜனுக்கு குவியும் பாராட்டு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
395Shares

நடராஜன் தன்னுடைய பொறுமை மற்றும் திடமான தன்மையை வெளிப்படுத்தினார் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் உடன் இணைந்து இருவரும் அபாரமாக பந்து வீசினார்கள். டி நடராஜன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

முக்கியமான கட்டத்தில் மேத்யூ வடே, லாபஸ்சேன் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கடைசி விக்கெட்டாக ஹசில்வுட்டை க்ளீன் போல்டாக்கினார்.

இந்த நிலையில் அணியின் துணைத் தலைவரான ரோகித் சர்மா, டி நடராஜனை வெகுவாக பாராட்டியுள்ளார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நடராஜன் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டிற்கு வெளியே முதல் முறையாக தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது எளிதான காரியம் அல்லை.

ஆனால் டி நடராஜன் எந்தவித நெருக்கடிக்கு ஆளாகவில்லை. அதிகமான பொறுமையுடன் வலுவாக தன்மையை வெளிப்படுத்தினார். அதிகமாக பேசுவது கிடையாது.

ஆனால், அவர் திடமான தனித்தன்மை வாய்ந்தவர். அவர் அணிக்காகவும் தனக்காகவும் சிறப்பாக செயல்பட விரும்புகிறார். இங்கே அதை செய்து கொண்டிருக்கிறார் என ரோகித் சர்மா மனதார பாராட்டியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்