துடுப்பாட்டத்தில் மிரட்டிய தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட தமிழக வீரர்கள்! தோல்வியே சந்திக்காமல் வெற்றிநடை போட்டு அசத்தும் அணி

Report Print Raju Raju in கிரிக்கெட்
324Shares

தமிழக அணி 4-வது வெற்றியை சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் பதிவு செய்துள்ளது.

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

கொல்கத்தாவில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஐதராபாத்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது தொடர்ந்து ஆடிய தமிழக அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெகதீசன் 78 ரன்களும் (51 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 40 ரன்களும் (30 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெற்றிக்கு வித்திட்டனர்.

தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்த தமிழக அணிக்கு கால்இறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்