பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட... தமிழன் வாஷிங்டன் சுந்தர் ரியாக்‌ஷன பாருங்க! வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
989Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியின் போது, பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு, அதை கவனிக்காமல் இருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தி காபாவில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 369 ஓட்டங்களும், அதன் பின் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்களும் எடுத்தது.

இப்போட்டியில் இந்திய அணியை சரிவில் இருந்து காப்பாற்றியதே வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாஹுர் தான், இவர்கள் இருவருமே நங்கூரம் போல் பார்ட்னர்ஷிப் செய்து சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே, இந்திய அணி இந்த இலக்கை எட்ட முடிந்தது.

இதனால் இரண்டு பேருக்குமே முன்னணி வீரர்கள், ரசிகர்கள் பலரும் இவர்களை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், போட்டியின் போது அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வீசிய பந்தை, வாஷிங்டன் சுந்தர், சிக்ஸருக்கு பறக்கவிட்டு, அசால்ட்டாக கீழே நோக்கி கெத்தாக பார்த்து கொண்டிருந்தார்.

இதைக் கண்ட வர்ணனையாளர்களும், வாஷிங்கடனின் இந்த ஸ்டைலை குறிப்பிட்டு பேசினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்