14 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட அங்கு சென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி

Report Print Raju Raju in கிரிக்கெட்
73Shares

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு விளையாட சென்றுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட மீண்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து அச்சத்தின் காரணமாக பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தன.

தற்போது வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளன. இதையடுத்தே 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் விளையாட சென்றுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்