தமிழன் நடராஜனை அழைத்து கோப்பையை கொடுத்து அழகு பார்த்த ராஹேனே! கமெராவில் சிக்கிய நெகிழ்ச்சி காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்
578Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பின், கோப்பையை கையில் வாங்கிய கேப்டன் ரஹானே, உடனே அந்த கோப்பையை நடராஜன் கையில் கொடுத்து அழகு பார்த்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போனின் காபாவில் நடைபெற்றது.

இந்த மைதானத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு அணியும் அவுஸ்திரேலியாவை ஜெயித்தது கிடையாது. இதனால் இது அவுஸ்திரேலியாவின் கோட்டை என்று கூறப்பட்டது.

ஆனால் அதை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது மட்டுமின்றி, தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

இதனால் கோப்பையை கையில் வாங்கியவுடன், அணியின் கேப்டன் ராஹனே உடனே நடராஜனை அழைத்து கையில் கோப்பையை கொடுத்து அழகு பார்த்தார், அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக வீரர் நடராஜனுக்கு இது முதல் டெஸ்ட் தொடர், அறிமுக தொடரிலே கோப்பையை கையில் பிடித்த நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்