இந்தியர்களை குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்... சாதிச்சுட்டாங்க! அவுஸ்திரேலியா பயிற்சியாளரின் எச்சரிக்கை வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
381Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பின், அந்தணியின் பயிற்சியாளர் ஜஸ்டிங் லாங்கர் இந்திய அணியை புகழ்ந்து பேசினார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்போனின் கபாவில் நடைபெற்றது.

இப்போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என வென்று வரலாற்று சாதனை படைத்தது.

குறிப்பாக இப்போட்டியில் பாண்ட் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். கபா அவுஸ்திரேலியாவின் கோட்டையாக இருந்த நிலையில், அந்த கோட்டையில் கால் பதித்து, இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து அவுஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், உண்மையில் அற்புதமான டெஸ்ட் தொடராக அமைந்தது. டெஸ்ட் தொடரில் முடிவில் வெற்றியாளர் அல்லது தோற்பவர் யாராவது இருக்க வேண்டும். இன்று டெஸ்ட் கிரிக்கெட்தான் வென்றது.

இந்தத் தோல்வி எங்களை நீண்ட காலத்திற்கு பாதிக்கும். இந்த வெற்றிக்கு முழுமையான உரித்தானவர்கள் இந்திய அணியினர்தான்.

மிகச் சிறப்பாக இந்திய அணியினர் விளையாடினார்கள். இந்தப் போட்டியிலிருந்து ஏராளமான பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.

முதலில் எதையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. இரண்டாவது, இந்தியர்களை ஒருபோதும், எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

150 கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள். நாம் விளையாடியது 11 வீரர்களுடன்தான். இந்த வீரர்கள் எவ்வளவு கடினமான சவால்களை அளிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனாலும், முழுமையான வெற்றியை இந்திய அணிக்கு வழங்கிவிட மாட்டேன். ஏனென்றால், முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களில் சுருட்டி, 3 நாட்களில் வெற்றி பெற்றோம்.

அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய வீரர்கள் துணிச்சலாகப் போராடினார்கள், வெற்றிக்கு உரித்தாகினார்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக்கொண்டோம்.

ரிஷப் பாண்ட்டின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. ஹெடிங்கிலியில் பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டத்தை எனக்கு ரிஷப் பாண்ட் ஆட்டம் நினைவுப்படுத்தியது. எந்தவிதமான பயமின்றி, ரிஷப் பந்த் சிறப்பாக பேட் செய்தார். நம்பமுடியாத ஆட்டமாக அமைந்தது.

ஷுப்மான் கில்லும் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்தப் போட்டி முழுவதும் இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர்கள் அவுஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை அளித்தார்கள், வெற்றிக்கு முழுமையானவர்கள் இந்தியர்கள் மட்டும்தான் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்