அவுஸ்திரேலியா வீரர்களை மிரள வைத்த தமிழன் வாஷிடன் சுந்தர்! நடராஜர் ஸ்டைலில் சிக்ஸர் அடித்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
794Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அடித்த சிக்ஸர் வீடியோவை முன்னணி வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இப்போட்டியில் அறிமுக வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

முதல் இன்னிங்ஸில் 62 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது சாதரணமாக வந்து 29 பந்தில் 22 ஓட்டங்கள் குவித்தும் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

அப்படி இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணியின் சிறந்த பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்தை வாஷிங்டன் சுந்தர் அசால்ட்டாக சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.

இதைக் கண்ட அவுஸ்திரேலியா வீரர்கள் மிரண்டு போனார். இது அவுஸ்திரேலியா அணி அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, பாராட்டியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்